இந்தோனேசியா மராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க ஜனாபதி பராக் ஒபாமா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.5 மாதங்களாக படகில் நிர்க்கதியான நிலையில் உள்ள இவர்களை, விடுவித்து ஆஸ்திரேலியா செல்வதற்கு இந்தோனேஷியா அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒபாமா தனது சிறு வயதில் சில காலங்கள் இந்தோனேசியாவில் வசித்து வந்துள்ளார். அத்துடன் அவர் இன்னும் சில நாட்களில் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தீர்மானத்திலும் உள்ளார்.
இந்நிலையில் பல மாதங்களாக படகில் உள்ள தமிழ் அகதிகளின் நிலவரம் குறித்து அவர் சிந்திக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு முறையான தீர்வு வழங்குவது குறித்தும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா அரசிற்கு வலியுறுத்த வேண்டும் என்வும் அந்த கடிதத்தல் கூறப்பட்டுள்ளது.



0 Responses to ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி ஒபாமாவுக்கு கடிதம்