Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கட்சிக்குள்ளிருந்து தீர்ப்பதைவிடுத்து வெளியேறுவதன் மூலம் சாதித்துவிட முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் நாம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விட்டு வெளியேறுவதற்கு நாங்கள் சிந்திக்கவில்லை. மக்கள் தமது பலத்தின் மூலம் தெரிவு செய்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் நோக்கம் எமக்கு இல்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினையினையோ அல்லது இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வினையோ கட்சிக்குள் இருந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுமாக இருந்தால் அதனைப் பேசித் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். பல கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டுத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்குள் முரண்பாடுகள் இருப்பது என்பது இயல்பானது. ஆனாலும் அனைத்துக் கட்சிசார்ந்தோரும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

கடந்த அரச தலைவர் தேர்தலின் போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன என்று தெரிவித்த அவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமது கட்சியைச் சார்ந்தவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறாமல் இருப்பதாகக் கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது என்று மறுத்துரைத்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்ட முடியும் என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

ஈழநேசன்இணையம்

0 Responses to கூட்டமைப்புக்குள் உள்ள பிரச்சனைகளை கூடி கதைத்து தீர்த்திருக்கவேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com