Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழமக்கள் ஜனநாயக்கட்சி எனப்படும் ஈபிடிபியின் தலைமைக்கும் அதன் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தோல்வி எதிர்நோக்கப்படலாம் என்ற அச்ச நிலை காரணமாக டக்ளஸ் தமது கட்சி முக்கியஸ்தரான றீகன் என்பவரின் பெயரினைப் பயன்படுத்தி அதற்கு நேரே தனக்கு தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள இலக்கத்தினைக் குறிப்பிட்டு தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதனை அடுத்து றீகன் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவாந்தாவுடன் முரண்பட்டதாகவும் இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் சார்பானவர்கள் மத்தியில் முறுகல் நிலை தொடர்வதாகவும் றீகனின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

றீகன் என்பர் கடந்த யாழ்.மாநகர சபைத் தேர்தலில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற போதிலும் அவருக்கு கல்வி அறிவு போதாது என்பதைக் காரணமாகக் காட்டி அவரை முதல்வராக நியமிக்கவில்லை அதன் போதிலிருந்தே ஈபிடிபியின் தலைமைப்பீடத்திற்கும் றீகன் தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதும் றீகன் கூடிய வாக்குகளைப் பெற்ற கரையோரக்கிராமங்களை இலக்கு வைத்தே டக்ளஸ் தேவாந்தா றீகனின் பெயரை தனது இலக்கத்துடன் இணைத்துப் பயன்படுத்தி வருவதாக நண்பர்களிடம் றீகன் கவலை வெளியிட்டுள்ளார்.

0 Responses to ஈ.பி.டி.பி.க்குள்ளும் முரண்பாடுகள் ஆரம்பம்! இரண்டாக பிளக்கும் என டக்ளஸ் அச்சம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com