மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான முன் ஆயத்தங்கள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளன. நீர்வேலி கைதடி தரவைப் பிரதேசத்தில் இம்மாதம் முதல் சவாரிப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்குரிய பரீரீட்சார்த்த ஓட்டங்கள் தற் போது நடைபெற்று வருகின்றன. இங்கு சமச்சீரான தரைப் பகுதி உள்ளதால் மாட்டு வண்டிகள் பெருமளவில் அதிர்வின்றி வேகமாக ஓட முடியும்.இதைக் காண ரசிகர்கள் யாழ்ப்பாணத்தின் நாலா புறங்களிலிருந்தும் இங்கு வருகை தருவது வழமை.
தமது கழகங்கள், அமைப்புக்களுக்கு நிதி தேவைப்படுவோர் இங்கு சவாரிப் போட்டி களை நடத்தி நிதி சேகரிப்பது வருடாந்த வழக்கமாகியுள்ளது.
வருடத்தின் பருவமழை பொழியத் தொடங்கும் வரை இங்கு சவாரிப் போட்டிகள் நடைபெறும்.
வலிகாமம் கிழக்கு புத்தூர் பிரதேச சபை யினர் செயலாளர் த. நடராசா சவாரிப் போட்டிகளை ஒழுங்கு செய்வோர் தம்மிடம் உரிய அனுமதி பெற்ற பின்பே நடத்தலாமென அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மாட்டு வண்டிச் சவாரிகளுக்கென பெயர் பெற்ற குடும்பங்கள், வீரர்கள் அன்றும், இன்றும் இருந்து வருவது மறைந்து போகாத ஒரு பண்பாட்டு அம்சமென பண்பாட்டு ஆர்வலர்கள் நினைவு கொள்கின்றனர்.



0 Responses to யாழில் மாட்டு வண்டி ஓட்டப்போட்டி