இலங்கைத் தீவில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இதில் வடக்கும் கிழக்கும் தமிழர்களது தாயகம். இங்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காக ஏறக்குறைய மூன்று சகாப்தங்களாக சாத்வீகப் போராட்ட மூலம் போராடிப் பலன் எதுவும் கிடையாத காரணத்தினால், ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது.
அதன் மூலம் ஏறக்குறைய இரண்டு சகாப்பதங்களாக வடக்கு - கிழக்கின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ், சகல கட்டுமானங்களுடன் சிறப்பாக இயங்கி வந்துள்ளது என்பது உலகறிந்த சரித்திரம்.
தமிழீழ விடுதலைப் போராட்டக் காலங்களில், பௌத்த சிங்கள அரசுகள் உலகம் எங்கும் சென்று பொய்யும் புரட்டுக்களும் கூறி, உலகநாடுகள் கொடுத்த பணம், ஆயுதம், மனிதவலு ஆகியவற்றினால் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கை தமது கண்மூடித் தனமான விமானத் தாக்குதலினாலும், குண்டு வீச்சுக்களினாலும் செல்வம் கொழித்த வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சூறையாடி அழித்து சாம்பல் மேடுகள் ஆக்கினர்.
உலகில் பல ஆயுதப் போராட்டங்கள் தோல்வியடைந்தது போல் தமிழீழ விடுதலைப் போராட்டமும் தோல்வி கண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்று சிங்கள பௌத்த அரசும் அதன் வால்பிடிகளும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வழங்கி, தமிழ் மக்களை தம்மைப்போன்று சரிசமனான உரிமைகொண்ட பிரசைகளாக பார்க்க முன்வராது, வடக்கு, கிழக்கில் பாரிய சிங்களக் குடியேற்றங்களையும், பௌத்த கோயில்களையும் நிறுவுவதோடு மட்டுமல்லாது, தமிழ் மக்களின் புராதன கோயில்களையும், கலாச்சாரத்தையும் தினமும் நாசம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற பெயரில் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களிடம் பௌத்த சிங்கள அரசும் அவர்களது பால்குடிகளும், வால்பிடிகளும், நிதிசேகரிக்க அல்ல பணம் பறிப்பதற்கு செயல் திட்டங்கள் நடைபெறுகின்றன. இது எவ்விதம் நியாயமானது?
வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில், அபிவிருத்திக்கு புலம்பெயர் வாழ் சிங்கள மக்களா நிதி கொடுத்தனர்?
புலம் பெயர் வாழ் சிங்களவர்களில் பெரும்பாலானோர், தமிழ் மக்களின சொத்துக்களை அழிக்கவும், கொல்லவும் சர்வதேச அளவில் நிதிசேகரித்து சிறீலங்காவுக்கு அனுப்பியதை நாம் ஒரு பொழுதும் மறக்க மாட்டோம்.
சிங்களவர்கள் வாழும் ஏழு மாகாணங்களின், அபிவிருத்தியையும், சீனா, ஈரான் போன்ற நாடுகளின் நிதி உதவியினாலேயே நடைபெற்றன, நடைபெறுகின்றன.
தமிழில் ஓர் பழமொழி சொல்வார்கள் உலகில் ஏமாற்றப்படுபவன் இருக்கும்வரை, ஏமாற்றுகிறவன் இருப்பான் என. இதேபோல் சிறீலங்காவின் அரச பரம்பரையான ராஜபக்சாக்கள் தொடர்ந்து ஏமாற்றுவதற்கு, எம்மிடையே ஏமாறுபவன் இருக்கக் கூடாது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும், இவ் விசித்திரமான சிறீலங்காவின் வேண்டுகோளை மிக அவதானமாக கையாளவேண்டும். எமது பணத்தில் சிங்களக் குடியேற்றம் செய்யவும், பௌத்த கோயில்கள் அமைக்கவும், வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் வர்த்தகம் செய்யவும் ரோசமுள்ள புலம்பெயர்வாழ் தமிழர்கள் எவரும் துணைபோகக் கூடாது.
இன்று உள்நாட்டிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழனிடம் மிஞ்சிய சொத்துக்களாக இருப்பது ரோசம், மானம், மரியாதையே. இவற்றை நாம் இப்பொழுது விட்டுக் கொடுக்க முடியாது.
இன்று எமது உடன் பிறவாச் சகோதரர்கள் யாவரும், வடக்கு கிழக்கில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது உண்மை.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பிய யாவரும் தமது தனிப்பட்ட முயற்சியினால் உறவினர்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள், புலம்பெயர்வாழ் நீண்டகால அமைப்பினர் மூலமாக உதவி செய்வதே மிகச்சிறந்த பணி.
இவை தவிர்ந்த எந்த உதவியையும் பௌத்த சிங்கள அரசிற்கு, அதனுடன் இணைந்து இயங்கும் பால்குடி, வால்பிடிகள் வளர உதவும் என்பதே உண்மை.
ச.வி.கிருபாகரன்,
தமிழர் மனித உரிமைகள் மையம்,
பிரான்ஸ்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் நிதியா?: கிருபாகரன்