Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்புக்களையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார்.

தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர்.

அங்குள்ள தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக சான்றிதழ் வழங்கினார்.

இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, செயற் குழு உறுப்பினர் போன்றோர் அசினுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் நடிகர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் இந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அசினுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்துவிட்டார். எனவே அசின் நடிகர் சங்கத்துக்கு வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் பொதுச் செயலாளர் ராதாரவி.

இதையடுத்து அசின் நடிகர் சங்கத்துக்கு வந்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் வரவில்லை.

எனவே அசினுக்கு ராதாரவி மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

இலங்கைக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதை மீறி அசின் இலங்கை சென்றார்.

இந்திப் படங்களில் நடிப்பதால் தயாரிப்பாளர் சொல்வதை கேட்க வேண்டி உள்ளது என்றும், தயாரிப்பாளர் படப்பிடிப்புக்காக எங்கு போகச் சொல்கிறாரோ அங்கு போகத்தான் வேண்டும் என்றும் அசின் கூறி இருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

ஆனால் அவர் கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு போகவில்லையா? தொழில் நிமித்தமாக எத்தனையோ பேர் போகவில்லையா? என்றெல்லாம் பேசுகிறார்.

நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என்று அறிக்கை கொடுத்து இருக்கிறார். ஆனால் இதுவரை சங்கத்துக்கு விளக்க கடிதம் எதுவும் அனுப்பவில்லை. இந்த நிலையில் சங்கம் எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற முடியாது…” என்றார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம்: ராதாரவி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com