வரலாற்றுப் புகழ் பெற்ற கீரிமலை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
மாவிட்டபுரம் கீரிமலை தீர்த்தக் கேணியில் இந்துக்கள் வரலாற்று ரீதியாக மிகத் தொன்மையான காலம் தொட்டு தமது பிரிந்த உறவுகளுக்காக பிதிர்க்கடன் செலுத்தி வந்திருக்கின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பகுதி அதிஉயர் பாதுகாப்புவலயமாக அறிவிக்கப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கு முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் அண்மையில் அங்கு செல்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்து.
மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் நீராடுவதை படையினர் தொடர்ந்தும் நேரடியாகவே பார்வையிடுகின்றனர். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல.
இதனைவிடவும் தீர்த்தக் கேணி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் நீராடுவதற்கு ஏற்றவகையில் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த வசதிகள் தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன் கேணியுடன் இணைந்தாகவே கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மலக் கழிவுகள் கேணியில் கலக்கும் நிலை காணப்படுவதாகவும் அங்கு சென்று திரும்பிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர்பலகை சிங்களத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to யாழ்.கீரிமலை தீர்த்தக் கேணிக்கு சிங்கள பெயர் "தம்பல பட்டுணவ"