பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி, சுவிஸ் ஜெனீவா ஐ.நா சபை முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மானிட நேய நடைப்பயணம் ஜேர்மன் நாட்டில் மிக உற்சாகமாக தொடரப்பட்டு வருகிறது.
ஜேர்மன் சார்புறூக்கன் நகரை அண்மித்து இருக்கின்ற தமிழீழ உறவுகள் நடைப்பயணத்தில் இணைந்து உற்சாகம் வழங்கி வருகிறார்கள். தற்போது இந்த நடைப்பயணமானது ஜேர்மன் மெர்சிக் (merzig) என்ற இடத்தினூடாக தொடரப்படுகிறது.
மூன்று ஐரோப்பிய நாடுகளினூடாக பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து வந்த மனித நேய நடைப்பயணமானது இன்று லக்சம்பேர்க் நாட்டின் எல்லைப் பகுதியை அடையவுள்ளது.
நடைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகியோரின் கால்கள் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தாலும் மன உறுதி தளராது தமது நடைப்பயணத்தை மிகமிக உற்சாகமாக மேற்கொண்டு வருகின்றனர்.
* இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
* எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
* மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
* தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஜேர்மனில் தொடரும் மானிட நேய நடைப்பயணம்! லக்சம்பேர்க் நாட்டை அண்மிக்கிறது