யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்கள், காணாமற்போதல் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அங்குள்ள தமிழ் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் எதேச்சையாக நடைபெற்றது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு ஒரு குறிப்பிட்ட அரசியல், பொருளாதார நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் என சிறிலங்கா கார்டியன் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவிரவாதம் பரப்பப்பட்டதன் நோக்கமே அங்கிருந்த தமிழ் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்யவே என்பது தெளிவாகிறது. அங்கு நிகழ்ந்த மிருகத்தனமான படுகொலைகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், பலர் காணாமல் போனமை ஆகியவை சட்ட ஒழுங்குக் குறைபாடுகளால் எதேச்சையாக நடந்தவை போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டாலும்கூட அவை அனைத்தும் தெளிவாகத் திட்டமிடப்பட்டு ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்ட வன்முறையே.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் உள்நாட்டில் வாழ்ந்து வரும் மக்களை இலக்காகக் கொண்டே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. பல ஆண்டுகளாக நீடித்த போரினாலும், படைத்தரப்பின் குவிப்பினாலுமே யாழ்ப்பாணம் அழிவிற்குள்ளாகியுள்ளது.
மிகச் சிறிய பரப்பளவைக் கொண்ட குடாநாட்டில் மட்டும் 40 ஆயிரம் படையினரின் அதிகாரத்தில் இருந்து வந்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் படையினரும், புலனாய்வுத்துறையுமே அனைத்திற்கும் பொறுப்பு வகிக்கின்றனர்.
இலங்கை படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றி 15 ஆண்டுகளும், போர் முடிபுக்கு வந்தது இரு ஆண்டுகளை நெருங்கியுள்ள போதிலும்கூட அரசாங்கத்தின் முதலீடுகள் மற்றும் திட்டங்கள் எதுவும் யாழ்ப்பாண மக்களைச் சென்றடையாமல் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் முடக்கப்பட்டுள்ளது.
போர் முடிபுக்கு வந்த பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்தபோதிலும்கூட அவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று தங்க முடியாத நிலை உள்ளது.
அதேவேளை சிங்களவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் புதிய தொழில்களை உருவாக்கப் படைத்தரப்பின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழிவகைகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. ஆளும் கட்சியிலுள்ள உள்ள முக்கிய பிரமுகர்களும், பிற கூட்டணிக் கட்சியினரும் உருவாக்கவுள்ள புதிய தொழில்களும் இதில் அடங்கும்.
தற்போது யாழ்ப்பாணப் பகுதியைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் அரசாங்கத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மக்களிடையே சில குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வருமானமீட்டும் தொழில்களை உருவாக்கும் பணியில் இக்குழுக்கள் இறங்கியுள்ளன.
தற்போது படையினரின் துணையுடன் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்தத் தீவிரவாத அலையானது யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவி வரும் சர்வதேச சமுதாயத்தின் செயல்களுக்கும் எந்தப் பலனும் இல்லாத சூழ்நிலையையே உண்டாக்கியுள்ளது. இவ்வாறு சிறிலங்கா கார்டியன் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழில் படையினரின் துணையுடன் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தீவிரவாத அலை