Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமை வேண்டி 2001ம் ஆண்டு இப்புனித நன்னாளில் பொங்குதமிழ்ப் பிரகடனம் செய்து மாபெரும் எழுச்சி கொண்டிருந்த யாழ். மண்ணில் டக்ளஸ் தேவானந்தா போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஸவை அழைத்து சூரியப் பொங்கல் விழாவை நடாத்தி முடித்து தமிழனத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஈழத்தமிழினம் சுயநிர்ணய உரிமை வேண்டி பேரினவாத சிங்கள அடக்குமுறைக்கெதிராக உரிமை வேண்டிப்போராடி பல்லாயிக்கணக்கான உயிர்த்தியாகங்களைப் புரிந்த தமிழினம் தமது தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டியும் சுயநிர்ணய உரிமைபெற்று தமது தாயகத்தில் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று உலக அரசாங்கங்களுக்கும் உலக மக்களுக்கும் எடுத்துரைப்பதற்காக 2001ம் ஆண்டு ஜனவரி இதேநாளில் யாழில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஒரே குரலில் பொங்குதமிழ்ப் பிரகடனம் செய்திருந்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து அவர்களின் வாழ்விடங்களை அழித்து ஏதிலிகளாகவும் சிறைக்கைதிகளாகவும் ஆக்கி இனப்படுகொலையொன்றை நடத்தி முடித்த சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ஸவிற்கு பொங்குதமிழ்ப் பிரகடனம் செய்த இந்நாளில் சூரியப்பொங்கல் விழா எடுத்த டக்ளஸ் தேவானந்தா சிங்களப் பேரினவாத அரசாங்கத்திற்கு மீண்டும் ஒருமுறை தனது விசுவாசத்தை உணர்த்தியமையானது தமிழ் மக்களை வேதனையடைச்செய்துள்ளது.

அத்துடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய யாழ் அரசாங்க உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து சர்வாதிகாரி மகிந்தவிற்கு விழா எடுத்து பொன்னாடை போர்த்தும், செயற்பாடானது தமிழர்களின் உரிமைகளை மேலும் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு தாரைவார்க்கும் என்பதில் இருவேறு கருத்துக்கிடமில்லை.

srrmkaran@gmail.com

1 Response to பொங்குதமிழ் பிரகடனம் நாளில் மஹிந்தவை அழைத்து பொங்கல் விழா எடுத்த டக்ளஸ்

  1. செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து துரோகி பட்டத்தை நிலைநிறுத்துகிறான் டக்கி. யாழ் வந்து போன கொலைவெறியனுக்கு கிழக்கில் துன்பப்படும் மக்களை சந்திக்க முடியாமல் போன காரணம் என்ன? யாழுக்கு வந்த மஹிந்த அங்கு மக்கள் படும் வேதனையை அறிந்து கொண்டானா? சீர் கெட்டுக் கிடக்கும் பாதைகள். கொலை,கொள்ளை அச்சத்தில் வாழும் மக்கள் சொந்த இடங்களில் வாழ முடியாது வேதனை சுமக்கும் அகதிகள். இவைகளைப்பற்றி ஏதாவது அறிய முற்பட்டான? அல்லது இந்த அடிப்பொடி டக்கி அதைப்பற்றி ஏதாவது தெரிவித்தானா? உலகை ஏமற்றிப் பிழைக்க இந்த பீடைகள் கொலைவெறியனுக்கு உதவிபுரிகின்றார்களா? துப்பாக்கி முனையிலும் மரண அச்சுறுததல்களுக்கு மத்தியில் வாழும் வாழ்வையே இந்த கொலைவெறியன் ஈழத்து மக்களுக்கு அளித்துள்ளதை மறந்து யாழ் மண்ணில் இந்த வெறியனை அழைத்து வந்தவர்களுக்கு தமிழர் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com