Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வாரம் சாவக்கச்சேரி பிரதேசத்தின் மீசாலைப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கொலையுடன் வவுனியாவை தளமாகக் கொண்ட துணைஇராணுவக்குழுவினருக்கு தொடர்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட படுகொலை செய்யப்பட்ட சாந்தினி என்ற பெண்ணின் கணவர், தனது மனைவியை படுகொலை செய்வதற்கு வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக்குழுவை சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானையை சேர்ந்த 24 வயதான பெண்ணுடன் தொடர்புகளை பேணிவந்த குறிப்பிட்ட நபர், தனது மனைவியை கொலை செய்துவிட்டு, சொத்துக்களை கைப்பற்றவே முயன்றுள்ளார்.

சாந்தினி படுகெலை செய்யப்பட்ட வெள்ளை நிற வானில் பயணம் செய்த குறிப்பிட்ட பெண் தற்போது யாழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த கொலையுடன் தொடர்புள்ள வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக்குழுவின் உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு சந்தினியின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீதிபதி சிறீலங்கா காவல்துறையினரை பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to சாவக்கச்சேரி பெண்ணின் கொலையுடன் துணைஇராணுவக்குழுவினருக்கு தொடர்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com