Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உண்மையான தமிழ் தேசியவாதி சிறிதரனை கொலை செய்வதற்காக நடாத்தப்பட்ட தாக்குதலை வவுனியாவாழ் மக்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பிரதித்தலைவர் எம்.எம்.ரதன் ஆசிரியர் தெரிவித்தார்.

சிறிதரன் உட்பட நாம் அனைவரும் சம்பந்தன் தலைமையில் அணிதிரண்டு இருக்கும் ஜனநாயக போராளிகள் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றும் வடகிழக்கு இணைந்த பிரதேசம் தான் அதற்காகவே நாம் போராடினோம், போராடுவோம்.

எமக்கான அரசியல் தீர்வு வரும் வரை எமது போராட்டம் ஓயாது. உண்மையான தமிழ் தேசியவாதி சிறிதரனை கொலை செய்வதற்காக நடாத்தப்பட்ட தாக்குதலை வவுனியாவாழ் மக்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள்.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பிரதித்தலைவர் எம்.எம்.ரதன் ஆசிரியர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரித்த வவுனியா மாவட்ட தனியார் கல்வி நிறுவனங்களிலும் அதன் பின்னர் நேற்று மாலை ஈச்சங்குளத்தில் உள்ள பூம்புகார் கிராமத்தில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரதன் ஆசிரியர்,

தமிழினம் மீண்டும் ஒரு வரலாற்று மிக்க தேர்தலை சந்தித்து நிற்கின்றது. வட-கிழக்கு இணைந்த எமது தாயக பிரதேசங்களில் அராங்கம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக முழுவளங்களையும் பயன்படுத்தி வெற்றிபெற நினைக்கின்றது.

ஆனால் அது அவர்களின் பகல் கனவாகவே இருக்கும். இதே போலதான் வவுனியா நகரசபையை கைப்பற்ற வேண்டும் என நினைத்தார்கள். இறுதியில் நடந்தது என்ன நாமே வெற்றி பெற்றோம்

தமிழ் தேசியத்திற்கான குரல் கொடுப்பவர்கள் ஆதரவாக செயற்படுபவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவலாயத்தினுள் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் பட்டப்பகலில் ரவிராஜ் திருமலையில் விக்கினேஸ்வரன் பொலனறுவைக்கு அண்மையில் சந்திரநேரு ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றையும் பாராளுமன்றத்திலிருந்து மல்லாவி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாங்குளத்தில் வைத்து சிவநேசனை கிளைமோர் தாக்குதலில் கொலை செய்தவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இதன் தொடர்ச்சியாகவே சிறிதரன் மீதான தாக்குதலை நாம் நினைக்கின்றோம்.

தமிழ் தேசியத்திலே பற்றுக்கொண்ட ஒரு ஜனநாயக போராளியாக கிளிநொச்சி வாழ் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடகிழக்கு தாயக உறவுகள் புலம்பெயர்ந்த உறவுகள் என அனைவரும் நேசிக்கும் மனிதர்தான் சிறிதரன்.

அண்மையில் கிளிநொச்சிக்கு என்னை அழைத்து கருத்தரங்கு ஒன்றை நடாத்தினார். அதன் பின்பு திருகோணமலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களுக்கு என்னையும் அழைத்துச் சென்றார்.

திருமலையில் உரைநிகழ்த்தும் போது எங்கள் தாயகத்தின் தலைநகர் என்றும் திருமலையே. என அவர் ஆணித்தரமாக கூறியிருந்தார்.

தமிழ் தேசியத்திற்கான உண்மை குரலாய் திகழும் சிவஞானம் சிறிதரனை கொலை செய்ய முற்பட்டவர்கள் ஒரு செய்தியினை உணர வேண்டும் ஒரு சிறிதரனை வீழ்த்த நினைத்தால் ஆயிரம் ஆயிரம் சிறிதரன்கள் உருவாகுவார்கள் என்பதே உண்மை. கடந்த கால எமது போராட்டங்களும் இதையே உணர்த்தி நிற்கின்றது ஏன் என்றால் நாம் ஆணிவேர் அறுபடாத ஆலமரங்களாய் திகழ்கின்றோம். என குறிப்பிட்டார்.

0 Responses to ஒரு சிறிதரனை வீழ்த்த நினைத்தால் ஆயிரம் ஆயிரம் சிறிதரன்கள் உருவாகுவார்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com