Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் நடாத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துரிமை இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் புகழேந்தி தங்கராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே பிரஸ்தாப தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கமொன்றுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றம் இல்லையென்று பொடா சட்டத்தின் கீழான வழக்கொன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் நடாத்துவதில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறு கையெழுத்து இயக்கம் நடாத்த தமிழ்நாடு காவல்துறை விடுத்திருந்த தடைஉத்தரவையும் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.

5 Responses to விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் நடாத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  1. இளமாறன் தமிழ்நாடு‍

    இது‍ போன்ற ஒரு‍ கையெழுத்து இயக்கம் நடத்தும் இயக்கங்கள், அதனை அனைவருக்கும் தெரிவித்து, அதிகமான கையெழுத்துக்களை பெற, பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டு‍ இதில், கட்சி வேறுபாடின்றி (தமிழ் உணர்வாளர்கள் அனைத்து‍ கட்சியிலும் இருப்பார்கள்), மாணவர்களையும் இதில் ஈடுப்படுத்தலாம். இதை நான் கூற காரணம், இது‍ போல் தமிழீழ மக்களுக்கு‍ ஆதரவாக, சென்னை பத்திரிகை அலுவலகத்தில், ஆறு‍ மாத காலத்திற்க்கு‍ முன்பு, கையெழுத்து‍ இயக்கம் நடந்தது, நான் அதில் கலந்து‍ கொண்டு‍ கையொப்பம் இட விரும்பியிருந்தேன், ஆனால், இணையத்தில் வந்த பிறக தான் அது‍ பற்றி தெரிய வந்தது. கையொப்ப இயக்கம் நடத்தும் போது, பத்திரிகை, இணையம் மற்றும் அணைத்து‍ ஊடகங்களிலும் தெரியப் படுத்த வேண்டும்.

     
  2. இது‍ போன்ற ஒரு‍ கையெழுத்து இயக்கம் நடத்தும் இயக்கங்கள், அதனை அனைவருக்கும் தெரிவித்து, அதிகமான கையெழுத்துக்களை பெற, பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டு‍ இதில், கட்சி வேறுபாடின்றி (தமிழ் உணர்வாளர்கள் அனைத்து‍ கட்சியிலும் இருப்பார்கள்), மாணவர்களையும் இதில் ஈடுப்படுத்தலாம். இதை நான் கூற காரணம், இது‍ போல் தமிழீழ மக்களுக்கு‍ ஆதரவாக, சென்னை பத்திரிகை அலுவலகத்தில், ஆறு‍ மாத காலத்திற்க்கு‍ முன்பு, கையெழுத்து‍ இயக்கம் நடந்தது, நான் அதில் கலந்து‍ கொண்டு‍ கையொப்பம் இட விரும்பியிருந்தேன், ஆனால், இணையத்தில் வந்த பிறக தான் அது‍ பற்றி தெரிய வந்தது. கையொப்ப இயக்கம் நடத்தும் போது, பத்திரிகை, இணையம் மற்றும் அணைத்து‍ ஊடகங்களிலும் தெரியப் படுத்த வேண்டும்.

     
  3. இளமாறன் தமிழ்நாடு‍
    வருகின்ற 30 ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து‍ 7 மணி வரை தான் கையெழுத்து‍ வேட்டை நடத்த அனுமதி அளித்திருக்கிறது சென்னை உயர் நீதமன்றம். அந்த இடத்தில் (சைதை பனகல் மாளிகை) மட்டும் தான் கையெழத்து‍ இயக்கம் நடத்த வேண்டுமா, வேறு‍ எங்காவது‍ நடத்தி, அந்த கையெழத்து‍ தாள்களை, கருத்துரிமை இயக்கம் திரு‍ புகழேந்தி தங்கராஜ் அவர்களிடம் கையளிக்க முடியுமா. அந்த நாளில், ஒரு‍ குறிப்பிட்ட இடத்தில் , சில மணி நேரங்கள் மட்டுமே நடத்தினால் , அதிகமான கையெழுத்துக்கள் பெற முடியாது‍. ஆகவே, இந்த கையெழுத்து‍ படிவம் எப்படி‍ இருக்க வேண்டும், ஆறு‍ வரிகள் அளவுக்கு‍ தமிழிலும் , ஆங்கிலத்திலும் வாசகங்கள் அமைத்து‍ அதன் கீழும், அடுத்த பக்கத்திலும் கையொப்பங்க்ள் பெற்று‍ , திரு‍ புகழந்தி அவர்களிடம் கையளிக்கலாம். ஆதலால், திரு‍ புகழந்தி அவர்கள் உடனடியாக இந்த கையெழுத்து‍ படிவம் எப்படி‍ இருக்க வேண்டும் என்று‍ தெரிவித்து, அதன் படி‍ ஏற்பாடு‍ செய்யலாம். அவர் உடனடியாக பத்திரிகைகள் மூலம் , எப்படிபட்ட வாசகங்கள் அமைக்க வேண்டும் (சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி எண் னையும் குறிப்பிட்டு, அப்படி‍ குறிப்பிடு‍ம் போது‍ , கூ டவே சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி வந்த செய்தி தாளையும் வைத்திருந்தால், கையொப்பம் இடுபவர்கள் பயமோ, தயக்கமோ இன்றி கையொப்பம் இடுவர்) என்பதை தெரிவிக்க வேண்டும், அதன் படி‍ முன்பே தயார் செய்து, கல்லுரிகள் மற்றும் பிற இடங்களுக்கு‍ சென்று‍ அதிமான கையெழுத்துக்களை பெற்று‍ இந்த இயக்கத்தை வெற்றி பெற வைக்கலாம்

     
  4. tamilan Says:
  5. thiru ilamaran solvadhu sariyanathu,anal atharku tamil munaivarkagal arvam kaatti vettri peracheyyavendum............ivan tamilan

     
  6. இளமாறன் தமி்ழ்நாடு‍
    இதுவரை இந்த கையெழுத்து‍ இயக்கத்தை பற்றி எந்த விவரமும் வெளிவரவில்லை. ஆகவே, வருகின்ற மார்ச் 30 அன்று‍ சென்னை சைதையி்ல் (சைதாபேட்டை) உள்ள பனகல் மாளிகை அருகே, சென்னையில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று‍ கூடி‍, கையொப்பம் இட்டு‍ ஆதரவை வழங்கலாம்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com