Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யப்பான் நாட்டிலு ள்ள ஹொன்சூவையும் அதனை அடுத்துள்ள நகரங்களையும் 8.9 அளவிலான பூமிநடுக்கமும் கடல்கோளும் 2011 மார்ச் மாதம் 11ம் நாள் காலை கடுமையாக பாதித்துள்ளதை கண்டு தமிழீழ மக்களாகிய நாம் கவலையடைந்துள்ளோம்.

இந்த துயரமான நேரத்தில் நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்பதுடன் எம்மால் முடிந்த அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம்.

உயிர்களையும் சொத்துகளையும் இழப்பதனால் ஏற்படும் துயரத்தை 2004ல் ஏற்பட்ட கடல்கோளையும் ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போரட்டத்தையும் அனுபவித்ததன் காரணமாக நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.

யப்பானிய அரசாங்கமும் யப்பானிய மக்களும் எமக்கு தாராள மனத்துடன் செய்த உதவிகளை நாம் நன்றியுடன் நினைவு கூருகிறோம். யப்பானிய தொண்டு நிறுவனங்களுக்கு தம்மால் முடிந்த அளவு தாராளமாக உதவுமாறு நாம் தமிழீழ மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

Peace Winds Japan, Association for Aid and Relief Japan, JEN (Japanese Emergency NGO) ஆகிய நிறுவனங்கள் தமிழீழ மக்களுக்கு உதவி வருகின்றன.

யப்பானிய அரசால் ஆரம்பிக்கப்பட்ட Japan Platform (JPF) ல் இந்த நிறுவனங்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றன. இவை இன்று பூமிநடுக்கத்தினாலும் கடல்கோளாலும் பாதிக்கப்பட்ட யப்பானிய மக்களுக்கு உதவுவதில் முன்னிற்கின்றன.

இந்த நிறுவனங்களை தொடர்பு கொள்வதற்கான தகவல்கள்:

Peace Winds Japan

Daini-Miyachu Bldg. 7F

3-8-37, Minamiaoyama,

Minato-ku, Tokyo, Japan

107-0062

Telephone: +81-3-6438-9401

Facsimile: +81-3-5786-7781

Email: meet@peace-winds.org

Website: http://www.peace-winds.org

Donations: http://peacewindsamerica.org/

Association for Aid and Relief Japan

Address:5F, Mizuho Building,

2-12-2 Kamiosaki,

Shinagawa-ku, Tokyo, Japan
141-0021
Telephone: +81-3-5423-4511

Facsimile : +81-3-5423-4450

Email: aar@aarjapan.gr.jp

Website: http://www.aarjapan.gr.jp/english/index.html

Japan Emergency NGO (JEN)

Daini Tobundo Bldg. 7F, 2-16
Agebacho,Shinjuku-ku, Tokyo, Japan
162-0824

Telephone: +81-3-5225-9352
Facsimile: +81-3-5225-9357

Email: info@jen-npo.org

Website: http://www.jen-npo.org/en/index.html

Donations: http://www.jen-npo.org/en/involved/donate1.php

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

1 Response to துயரமான நேரத்தில் தமிழீழ மக்களாகிய நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்

  1. Arasan anru kolvaan theivam ninru Kollum. When our blood was killed in vanni this Japan has supported to the war crimers. So we shoud not worry about them.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com