மனித உரிமைகள் மீறப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. வன்னிப்போரின் இறுதி நாட்களில் அப்பாவிமக்கள் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டு விடயத்தில் நாம் ௭ந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் தயாரில்லை. இதேபோல ஆயுதம் இல்லாமல் சரணடைய வந்தவர்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம் ௭ன்று இலங்கை வந்துள்ள கனேடிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள கனேடிய பாராளுமன்றக் குழுவினர் நேற்று சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் கிரிஸ் அலெக்சாண்டர், ரிக் டிஸ்ட்ரா, வேர்ன் வைட், ஜோன் லைட் ஆகிய கனேடிய பாராளுமனற் உறுபபினர்களுடன், கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போதே கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
0 Responses to யுத்தக் குற்றச்சாட்டு விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை