Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது தென் கெரியாவில் கூடியுள்ள உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதம் அணு ஆயுதத்தை ஏந்தினால் என்ன செய்வதென ஆராயும் மாநாட்டை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்கப்போன அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வட – தென் கொரிய எல்லையின் இராணுவ சூனியப் பகுதிக்கு சென்று, தொலை நோக்கி மூலம் வடகொரியாவை பார்த்த செய்தி உலகப் பத்திரிகைகளில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக அங்கு சென்றுள்ள டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித்தும் அப்பகுதிக்கு சென்று தொலை நோக்கி மூலம் வடகொரியாவை பார்த்தாகவும், நமது பிரதமர் மேலும் ஒரு காலடி வட கொரியாவை நோக்கி முன்னாக வைத்தார் என்றும் டேனிஸ் ஊடகங்கள் எழுதியுள்ளன.

இப்படி தலைவர்கள் வடகொரியாவை தொலை நோக்கி மூலம் எட்டிப் பார்ப்பதால் வடகொரியாவின் அணு குண்டை கண்டு பிடித்துவிட முடியாது. மேலும் இப்படியான கோமாளித்தனங்களை உலக சமுதாயம் அடையாளம் காணாமல் இருக்கும் என்றும் கருத முடியாது.

அணு ஆயுத பயங்கரவாதம் என்பது ஒரு பூச்சாண்டி வேலை அதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு அறவே இல்லை. அப்படி இருப்பினும் இவர்கள் மாநாடு போட்டு வடகொரியாவை தொலை நோக்கி மூலம் பார்க்குமளவுக்கு விவகாரம் பெரிதாக இல்லை என்று டேனிஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அணு குண்டை எடுத்து வருவது, அதை இன்ஸ்ரலேசன் செய்வது, வெடிக்க வைப்பது எல்லாம் பாரிய வேலைகளாகும். அந்தளவுக்கு பயங்கரவாதம் நவீனத்துவம் பெற்றுவிடவில்லை என்றும் தெரிவித்தனர். பின்லேடன் மறைந்திருந்த இடத்தின் சீத்துவக்கேட்டை பார்த்தால் பயங்கரவாதம் இருக்கும் பாமரத்தனத்தை புரிய முடியும்.

மேலும் அன்னிய ஏவுகணைகளால் தமது நாடு தாக்கப்படாமல் தடுக்கப்படும் என்றும், அதற்காக வானத்தில் ஸ்ரார்வோர்ஸ் வேலைத்திட்டம் அமைக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் றொனாட் றேகனும், பின்னர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சும் பேசிக் கொண்டிருக்க, மிகவும் தாழ்வாக பறந்த இரண்டு பயணிகள் விமானங்கள் செப் 11. 2011 அன்று அமெரிக்க உலக வர்த்தக கட்டிடங்களில் மோதி எல்லா கனவுகளையும் தவிடு பொடியாக்கியது தெரிந்ததே.

அணு ஆயுத பயங்கரவாதத்தைவிட, இன்றுள்ள நிலையில் சோலோ பயங்கரவாதமே பாரிய பிரச்சனையாக வரும் என்று நிபுணர்கள் கூறினார்கள். பிரான்சில் முகமட் மராக் சாதாரண மோட்டார் சைக்கிளில் கெல்மட் அணிந்து வந்து ஏழு பேரை சுட்டுக் கொன்றது தெரிந்ததே. பயங்கரவாதிகள் இது போன்ற பிஸ்டல் குழுக்களாக மாறுவதே வருங்காலங்களில் பிரச்சனையாக அதிகரிக்கும் என்று கூறினார்கள். அணு குண்டை அடையாளம் காணலாம் ஆனால் பிஸ்டல் குழு அதைவிட அபாயமானது என்பதை பிரான்சில் அல் குவைடா செய்த வேலையும், ஏமனில் அமெரிக்க ஆசிரியர் ஒருவரை சுட்ட வேலையும் அமைந்துள்ளது. ஆகவே இன்றுள்ள பிரச்சனை அணு ஆயுத பயங்கரவாதமல்ல பிஸ்டல் குழு பயங்கரவாதமே என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

ஆனால் தற்போது உலகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏவுகணைகள் வெடித்து சிதறும் 5000 அணு குண்டு தலைகளை தாங்கியபடி உலகத்தின் இலக்குகளை குறிபார்த்தபடி இருக்கின்றன. எனவே மேலை நாடுகளின் அணி ரஸ்யா போன்ற நாடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கினால் அணு குண்டுகளை குறைக்கலாம் என்ற கருத்தை அமெரிக்க அதிபர் முன் வைத்தார். ரஸ்யா – அமெரிக்கா இரண்டும் தம்மிடமுள்ள அணு ஆயுதங்களை குறைக்கும் பேச்சுக்களை முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க பிரான்சில் ஏழுபேரை சீரியல் கொலை செய்த அல் குவைடா பயங்கரவாதி முகமட் மராக்கின் அண்ணனான 29 வயதுடை அப்டில் காடில் மராக் நேற்று ஞாயிறு கைது செய்யப்பட்டார். இவர் காலஞ்சென்ற பயங்கரவாதி மராக்கின் படுகொலை முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கலாம் என்று சந்தேககிக்கப்படுகிறது. இவர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இரகசிய போலீசார் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அலைகள்

0 Responses to அணு ஆயுதப் பயங்கரவாதம் ஒரு பூச்சாண்டி வேலை நிபுணர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com