Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொபி ஆனானின் அறிவித்தல் வெளியான 24 மணி நேரத்தில் சிரியாவில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 58 பேர் பொது மக்கள். கோம்ஸ் நகரத்தில் மட்டும் 15 பேர் நேற்று கொல்லப்பட்டார்கள். சிரியாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஐ.நா செய்திகளுக்கு துருக்கி பிரதமர் ஏர்டோகன் காட்டமான பதிலை வழங்கியுள்ளார். ஆஸாட்டுடன் சமாதானத்திற்கு போயுள்ள ஐ.நாவின் செயலை அவர் வன்மையாகக் கண்டித்தார். பத்தாம் திகதி சமாதானம் அமலுக்கு வருமென்று கூற, அதற்குள் வேக வேகமாக சங்காரம் நடாத்துகிறது சிரிய படைகள். கொலைஞன் அவசரமாக தனது பணிகளை முடிக்கிறான், அதற்கு மறைமுகமாக துணை போகிறது ஐ.நா. கொலைஞனுக்கு எதிராக சட்டமியற்றப் போன ஐ.நா வாக்குமாறி அப்பாவிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்படியான ஐ.நா செய்யும் பற்பல கூத்தாட்டங்களுக்கு துணைபோன கொபி அனானின் முயற்சி சிரிய பொது மக்களுக்கு சாதகமாக அமையாது என்ற செய்தி துருக்கி பிரதமரின் கருத்தில் தொனிக்கிறது.

ஏற்கெனவே சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த உப்புச் சப்பில்லாத பிரேரணையை செல்லாக்காசு பிரேரணையாக மாற்றியது இந்தியா. இப்போது கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும், அப்பாவிகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி வெகு தொலைவு போயுள்ளது. இதுபோன்ற ஒரு அவல நிகழ்வே சிரியா தொடர்பான ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கும் நடந்துள்ளது. கொபி அனான் இலங்கை வந்து வன்னிக்கு போகாமல் திரும்பியவர் என்பது கவனிக்கத்தக்கது. இலங்கை விடயத்தில் மோசமான தவறிழைத்த ஐ.நா செயலர் வரிசையில் இவரும் முக்கியமான ஒருவராகும். அடுத்த முக்கியமானவர் பான் கி மூன் என்பது தெரிந்ததே. இதுபோன்ற வரலாற்று பின்னணியுடைவர்கள் சமாதானத்தை விசுவாசமாக எட்டித்தொட வாய்ப்பிருப்பதாகக் கூற முடியாது. அதற்கு சிரியாவில் இறந்து கிடக்கும் 80 சடலங்களுமே சாட்சியாகும்.

இது இவ்விதமிருக்க பிரான்ஸ்சில் அல் குவைடா தீவிரவாதி முகமட் மராச் நடாத்திய தாக்கதலில் ஏழு பேரை பலிகொடுத்த பிரான்ஸ் இப்போது, பாயும் புலியாக மாறியுள்ளது. தொடர்ந்தும் நாடளவியரீதியில் கடும்போக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் நேற்று பத்துப்பேர் கைது செய்யப்பட்டார்கள். ஏற்கெனவே 19 பேர் கைதாகி விசாரணையில் உள்ளார்கள். இதே பாணியில் அமெரிக்காவும் கைதுகளை முடுக்கிவிட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த பத்தாயிரம்பேர் மடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் லிபியாவில் அமைதி திரும்பிவிட்டது என்று கருதியோருடைய எண்ணங்களில் தொடர் இடி விழ ஆரம்பித்துள்ளது. நேற்று மேற்கு லிபியாவின் ஸ்சுவாரா நகரத்தில் இரண்டு போராளிக் குழுக்களிடையே நடைபெற்ற மோதலில் 14 பேர் கொல்லப்பட்டு, 80 பேர் படுகாயமடைந்தனர். ஒரு போராளிக்குழுவை இன்னொரு போராளிக்குழு கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ரி.என்.சி சமாதானக் குழு போயுள்ளது.

தெற்கு ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் தனது 13 – 14 வயதுடைய இரண்டு பிள்ளைகளுடன் மீன் பிடிக்க சென்ற 48 வயது பெண்மணியை முதலை கடித்து கொன்றது. ஏரியில் இறங்கிய பெண் மணியை நோக்கி விசுக்கென எழுந்த முதலை அவருடைய கையை பிடித்து இழுத்துக் கொண்டு நீருக்குள் மூழ்கியது. பிள்ளைகள் ஓலமிட்டதால், உதவிக்கு ஆட்கள் வந்தாலும் பெண்மணியை காப்பாற்ற முடியவில்லை.

அலைகள்

0 Responses to கொபி ஆனானின் முதுகில் குத்திய சர்வாதிகாரி ஆஸாட்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com