ஏப்ரல் 1 ஆம் தேதி – முட்டாள்கள் தினம். ‘உன் வருகைக்காக கார்டன் கதவுகளை திறந்து வைத்திருக்கிறேன்..’ என, அங்கிருந்து சமிக்ஞை கிடைக்க.. அன்று ராம நவமி என்பதால், மகிழ்ச்சிப் பெருக்கில் சென்னை பாண்டி பஜாரில் உள்ள அகஸ்தியர் ஆலயத்துக்குச் சென்றார் சசிகலா. சீதா கல்யாண வைபோக நிகழ்ச்சியும் ஆலயத்தில் நடந்திட, பரவசப்பட்டார் சசிகலா.
மன அமைதிக்கான சசியின் தனிப்பட்ட தரிசனத்துக்கு எந்த விதத்திலும் இடையூறு வந்து விடக் கூடாது என்று மீடியாக்களை ஆலய நிர்வாகம் கோவிலுக்குள்ளே அனுமதிக்கவில்லை. ஆனாலும், கற்பூர தீபாராதனையை பயபக்தியோடு அவர் வணங்கியதைப் படமெடுத்துவிட்டார் ஒரு பக்தர்.
குஷி மூடில் இருந்த சசிகலா கரன்ஸி நோட்டுக்களை அர்ச்சகருக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். மறுநாளே, போயஸ் தோட்டத்துக்குள் ‘என்ட்ரி’ ஆனார். அங்கே நட்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மீண்டும் பரவசம்! இவ்விருவரும் மீண்டும் இணைந்ததை ஏனோ அக்கட்சியில் ஒருவர் கூட பட்டாசு வெடித்து கொண்டாடவில்லை.
சி.என்.இராமகிருஷ்ணன்
ஒரு புறம் பக்தி பரவசம்! இன்னொரு புறம் நட்பு வெள்ளம்! இரண்டிலும் திளைத்த சசிகலா! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
03 April 2012
விட்டுப்போன ஏழரை நாட்டுச் சனி மீண்டும் தொட்டது ,
தொடுவதெல்லாம் கெடுவதற்கு .