தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு நேற்று (29.05.2012) மதுரை ஆதினம் அருணகிரிநாதர், இளைய ஆதினம் நித்தியும் வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையில் பெண் சீடர்கள் 100 பேரும், ஆண் சீடர்கள் 70 பேரும் அவர்களோடு இரவு கஞ்கனூர் விருந்தினர் மாளிகையில் தங்கினர்.
இன்று (30.05.2012) காலை கோவில் பிரகாரத்தை மவுன ஊர்வமாக சென்று சுற்றுவது என்று நித்தி தரப்பு முடிவு செய்தது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. பிறகு முன்னாலும் பின்னாலும் காவல்துறை வாகனத்தில் நடுவே இருந்த ஆதினங்கள் 5 நிமிடத்தில் சுற்றி வந்தனர்.
சலசலப்பு கிராமத்திற்குள் அதிகரித்து வந்த நிலையில், நித்தி மற்றும் அருணகிரிநாதர் மதுரைக்கு புறப்பட்டனர். புறப்பட்டு செல்லும் வழியில் கோயில் வாசலில் நின்ற எதிர்பாளர்கள் நித்தி கார் மீது செருப்பு வீசிவிட்டனர்.
அதைப் பார்த்த சீடர் இருவர், யார் காரில் செருப்பை வீசினாய் என்று கேட்டுக்கொண்டு ஆவேசத்துடன் வர, சுற்றி நின்ற எதிர்ப்பாளர்கள், அந்த சீடரை வளைத்து அடித்து உதைத்தனர்.
இதைப்பார்த்த காவல்துறையினர் எதிர்ப்பாளர்களை அடித்து விரட்டினர். எதிர்ப்பாளர்கள் சிலரை காவல்துறை வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் சுக்கிரன் தலம் அனலாக வீசிக்கொண்டிருக்கிறது.
நித்தி இருந்த காரின் மீது செருப்பு வீச்சு! நித்தி முன்பே சீடருக்கு அடி உதை! கஞ்சனூரில் பரபரப்பு!
பதிந்தவர்:
தம்பியன்
30 May 2012
0 Responses to நித்தி இருந்த காரின் மீது செருப்பு வீச்சு! நித்தி முன்பே சீடருக்கு அடி உதை! கஞ்சனூரில் பரபரப்பு!