சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய பயணத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் உலகப் பிரசித்தி பெற்ற AVAAZ பேரியக்கம் குதித்துள்ளது.
உலகின் பலபாகங்களிலும் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட AVAAZ பேரமைப்பானது, காலநிலை மாற்றம், மனித உரிமைகள், வறுமை உட்டப பல்வேறு தளங்களிலும் பணியாற்றி வருகின்றது.
இந்நிலையில் AVAAZ அமைப்பானது மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய வருகைக்கு எதிராக இணைவழி மின்னொப்ப போராட்டமொன்றினை திறந்து விட்டுள்ளது.
கடந்த மே 28ஆம் நாள் தொடக்கிவிடப்பட்டுள்ள இந்த மின்னொப்ப போராடத்தில், உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்வது என்பது, சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர்களுக்கு இனவழிப்பினை மீண்டுமொரு தடவை உலகிற்கு அம்பலப்படுத்த, கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளதென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Facebook, Twitter போன்ற அனைத்து இணைப்பரப்பின் வழியே உலகெங்கும் அமைப்பின் மின்னொப்ப போராட்டத்தினை பரவச் செய்ய முடியும்.
இந்த இணையவழி போராடத்தில் இணைந்து கொள்ள http://www.avaaz.org/en/petition/Dont_Let_Alleged_War_Criminal_Rajapaksa_Dine_With_The_Queen/ குறித்த இந்த இணைய இணைப்பிற்கு சென்று மின்னொப்பமிட்டுக்கு கொள்ளலாம்.
இதேவேளை பிரித்தானிய மாகாராணியாருக்கு நேரடியாக தகவல்களை அனுப்பும் வகையில் உள்ள http://www.thediamondjubilee.org/send-message-queen இணையவழியூடாகவும் புலம்பெயர் தமிழர்கள் பலர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் வருகை;கு எதிரான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
மகிந்த ராஜபச்சவின் பிரித்தானிய வருகைக்கு எதிரான போராட்ட களத்தில் AVAAZ பேரியக்கம்
பதிந்தவர்:
தம்பியன்
30 May 2012
0 Responses to மகிந்த ராஜபச்சவின் பிரித்தானிய வருகைக்கு எதிரான போராட்ட களத்தில் AVAAZ பேரியக்கம்