பிரித்தானியா மான்சன் ஹவுஸ் (Mansion House) ல் இன்று புதன்கிழமை காலை இடம்பெறவிருந்த மகிந்த ராஜபக்சவின் உரை தமிழ் மக்களின் தொடர் போராட்டத்தாலும் போராட்ட ஏற்பாடுகளாலும் ரத்துச் செயயப்பட்டுள்ளது.
இருப்பினும் ஐரோப்பிய மக்கள் ஏற்கனவே புறப்பட்டு விட்டதாலும் கடைசி நேரத்தில் அதனை இடம்மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் திட்டமிட்டபடி Marlborough House ல் காலை 8 மணிக்கு கூடி அங்கு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டு மதிய விருந்து இடம் பெறும் Marlborough House (underground- charing cross & GreenPark)அடைந்து அங்கு குறிப்பிட்ட தொகையினரை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுத்தி விட்டு ஏனையவர்கள் அனைவரும் மகிந்தர் தங்கியிருக்கும் Hilton Hotel ஐ சென்றடைந்து அவர் மாலை விமான நிலையம் புறப்படும் வரை எங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஏங்கள் தொடர் போராட்டங்களும் உறுதியான செயற்பாடுகளுமே எங்களது தாயகம் நோக்கிய பயணத்தை முன்னகர்த்தும் என்பதால் எங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொருட்படுத்தாமல் நம்பிக்கையோடு உற்சாகமாக இப் போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
மகிந்தவின் உரை ரத்துச் செய்யப்பட்டாலும் சில மாற்றங்களுடன் திட்டமிட்டபடி போராட்டம் இடம்பெறும்
பதிந்தவர்:
தம்பியன்
06 June 2012



0 Responses to மகிந்தவின் உரை ரத்துச் செய்யப்பட்டாலும் சில மாற்றங்களுடன் திட்டமிட்டபடி போராட்டம் இடம்பெறும்