தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து எமது மண்ணை எமது கலாசாரத்தை ஆக்கிரமித்து சீரழித்து கொண்டிருக்கும் சர்வாதிகார குடும்ப ஆட்சியின் தலைமைச் சதிகாரனும்,மனநோயளியுமான மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானிய வருகை தந்துள்ளார் என்ற செய்தி ஐரோப்பிய தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களையே சினம் கொள்ள வைத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் குற்றவாளி மஹிந்த ராஜபக்ஸ குடும்பமும் அவரது அடிவருடிகளும் தண்டிக்கப்படும் வரை உலகின் எந்தநாட்டுக்கு சென்றாலும் துரத்தியடிப்போம் என்பதில் புலம்பெயர் தமிழர்கள் உணர்வோடும் உறுதியோடும் இருகின்றார்கள்.
அந்த உணர்வினை ,உறுதியை எதிர்வரும் 6 ஆம் திகதி புதன்கிழமை லண்டனில் வெளிப்படுத்த புலத்திலும் பலமாய் இருக்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் புயலாய் எழுவோம்.
"காலத்தால் ஒன்றுபடுவோம்! கை கோர்த்து நிற்போம்! கூறுபட்டு தமிழ்ச் சமுதாயம் நூறு குழுவாகத் தோன்றி மாறுபட்டுச் சிந்தித்தால் வீழ்ச்சிதான். காலத்தால் ஒன்றுபடுவோம் கை கோர்த்து நிற்போம்.”
ஸ்கொட்லாந்து தமிழர் பேரவை
0 Responses to ஸ்கொட்லாந்து வாழ் தமிழ் மக்கள் விடுக்கும் அவசர வேண்டுகோள்!