Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெக்சிக்கோவில் நடைபெற்ற ஜி – 20 நாடுகளின் மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பிய தலைவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை விடுத்தார்.

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் பணிகளை ஐரோப்பாவின் தலைவர்கள் மந்த கதியிலேயே முன் நகர்த்தி செல்கிறார்கள், இதை நான் சொல்ல வேண்டிய தேவையில்லை அவர்களுக்கே தெரியும்.

ஐரோப்பிய தலைவர்களின் பொறுப்பற்ற செயல் அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையே மந்த கதிக்குள் தள்ளியுள்ளதை புரிய வேண்டிய நேரம் இதுவாகும்.

ஆகவே அனைத்துத் ஐரோப்பிய தலைவர்களும் உலகத்தின் நன்மை கருதி புதியதோர் பொருளாதார உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அது என்ன உடன்பாடு என்று சாதாரண மக்கள் குழம்புவதற்கு வாய்ப்புண்டு, அமெரிக்க டாலரைவிட குறைவான பெறுமதியில் இருந்த ஐரோப்பிய நாணயங்கள் யூரோவின் வருகையுடன் டாலரை முந்திய பெறுமதி கொண்ட நாணய நாடுகளாக மாற்றமடைந்தன.

ஆனால் அந்த வீக்கம் விரலுக்கு ஏற்ற வீக்கமாக இல்லை எனவே பெறுமதியை குறைத்து சிக்கலை தீருங்கள் என்பது ஒபாமாவின் வழிகாட்டலாகும்.

இரட்டைக் கோபுர தகர்ப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் போன்ற அமெரிக்காவின் நாடகங்கள் யூரோ நாணயத்தின் பெறுமதியுடன் தொடர்புபட்டவை என்பது ஐரோப்பிய தலைவர்கள் அறிந்த இரகசியமாகும்.

யூரோவிற்குள் நீங்கள் போனால் அமெரிக்காவை முந்த நேரிடும், அப்படி செய்தால் கிரேக்கத்திற்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்பதெல்லாம் எழுதப்படாத செய்திகளாக உள்ளன.

இருப்பினும் இந்த நெருக்கடியில் இருந்து ஐரோப்பா விரைவாக மீண்டெழ உலக நாடுகள் உதவி புரிய காத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யூரோ என்ன ஈயக்குடத்தை சுமந்துள்ளதால் ஐரோப்பிய தலைவர்கள் நத்தை வேகத்தில் பயணிக்கிறார்கள் என்பது ஒபாமாவின் சொற்பொழிவின் மையக்கருத்தாகும்.

யூரோவை ஏற்காத டென்மார்க் அமெரிக்காவின் பின்னால் சென்று, சீனாவிடம் 18 பில்லியன் குறோணருக்கு வர்த்த உடன்படிக்கை செய்து நெருக்கடியில் இருந்து மீண்டது கடந்த வாரம் நடந்த புதுமையாகும்.

இதுபோல உலகக் காலநிலை மாநாடு பிரேசில் நாட்டின் தலைநகர் றியோடி ஜெனிரோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, உலகத்தின் முக்கிய தலைவர்கள் அங்கு பிரசன்னமாகியுள்ளார்கள்.

உலகத் தலைவர்கள் புவி வெப்பமாவதைத் தடுக்க இனியாவது முன் வருவார்கள் என்று றியோ மாநாடு எதிர்பார்க்கிறது.

இது புவி வெப்பமாதல் என்ற போர்வையில் பெரும் பணத்தை விழுங்கும் கூத்தாட்டம் என்பது கவனிக்கத்தக்கது.

புவி வெப்பமடைவதைத் தடுக்க செலவாகும் கோடான கோடி பணத்தை ஐ.நாவின் காலடியில் கொட்டினால் அதை வைத்து ஐ.நா விளையாட ஆரம்பிக்கும் என்பது இதன் கருத்தாகும்.

நூறு டாலர்கள் கொடுத்தால் ஒரு டாலர் வெப்பத்தை தடுக்க பயன்படும் 99 டாலர்கள் பலருடைய சேவைக்கு ஊதியமாகப் போய்விடும் என்பது பல நாடுகளுக்கு தெரிந்த உண்மையாகும்.

தற்போது றியோ டி ஜெனிரோவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

அலைகள்

0 Responses to ஐரோப்பிய தலைவர்களுக்கு இறுதி வாய்ப்பு: ஒபாமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com