ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சுமார் 46 பேர், கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆஸ்திரேலியாவை சென்றடடைந்த இவர்கள், அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு கடத்தப்பட்டவர்கள் விமானநிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, நீர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், இதையடுத்து அவர்களை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதில் 38 பேர் தலா ஐந்து லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை, காலி, அம்பிலிப்பிட்டிய, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பயணம் செய்துள்ளனர்.
இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அகதிகளுக்கு அங்கு பாதிப்புக்கள் ஏதுமில்லை என ஆஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்து கூறிவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஆஸ்திரேலிய அரசின் கவனத்தில் கொள்ளப்படாமல் இருப்பது ஏன் என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

0 Responses to ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதிகள் 46 பேர் கைது?