ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஒருநாள் ஆட்டத்துக்காக இந்தியா பாகிஸ்தான் அணியினர் இன்று சென்னை வந்தடைந்தனர்.
பாகிஸ்தான் அணி இந்தியாவில் இரண்டு வாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு T20 போட்டிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ள நிலையில், இரண்டு 20 ஓவர் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்த இரண்டு 20 ஓவர் போட்டிகளும் 1:1 என்கிற நிலையில் சமனில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் சென்னை வந்துள்ளனர்.
இவ்வேளையில், தமிழ்நாட்டின் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் தமக்கு இடையிலான போட்டித் தொடரொன்றில் மோதவுள்ளன. இந்த நேரத்தில் மழை வந்து ஆட்டத்தைக் கெடுத்து விடுமோ, என்கிற கவலையும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சென்னை வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி