தனித்தெலுங்கானா விவகாரம் மீண்டும் இழுபடுவதை கண்டித்து இன்று ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் பந்த் தொடர்ந்து வருகிறது.
பாஜக மற்றும் தெலுங்கான கூட்டு நடவடிக்கை குழு என்பன பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாகவே தனித் தெலுங்கானா விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், டெல்லியில் அனைத்துக் கட்சிக் நடைபெற்றது. கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் தனித் தெலுங்கானா குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று ஷிண்டே தெரிவித்தார்.
இதையடுத்தே டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திர சேகர ரெட்டி, உடனடியாக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போன்று பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ககாத்தியா மற்றும் ஒஸ்மானியா பல்கலைக்கழக பரீட்சை நடவடிக்கைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா அமைந்துள்ள 10 மாவட்டங்களில் முழுக்கடையடைப்பு நடைபெற்று வருகிறது. தனி மாநிலம் எனும் தீர்வை நோக்கி செல்வதற்கு மத்திய அரசு வேண்டுமென்றே இழுத்தடிப்பு மேற்கொள்வதாக தெலுங்கானா ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

0 Responses to தனித் தெலுங்கானா : ஆந்திராவில் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள பந்த்!