Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனுக்கு அண்மையில் கனடாவின் ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற விருது விழா ஒன்றில் பரதநாட்டிய நட்சத்திர விருது வழங்கப்பட்டது.

கனடாவில் கடந்த சில வருடங்களாக இயங்கிவரும் தமிழ் பண்பாட்டு மேம்பாட்டு பேரவை என்னும் அமைப்பு அண்மையில் ஒரு சிறப்பு விருதுகள் வழங்கும் வைபவத்தை நடத்தியது.

மேற்படி விருது விழாவில் கனடாவில் கடந்த 20 வருடங்களுக்குள் பரதநாட்;டிய அரங்கேற்றம் செய்த பரதக்கலைஞர்கள் உட்பட மேலும் மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு போன்ற துறைகளில்  சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து சிறப்பு விருது வழங்கும் மேற்படி வைபவத்தில் பல இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி விருது வழங்கும் விழாவில் முதன் முதலாக பரதநாட்டிய ஆசிரியை ஒருவரிடம் அரங்கேற்றம் பயின்று அவரது முதன் மாணவியாக அரங்கேற்றம் செய்தவர் என்ற பெருமைக்குரிய சில பரதக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களில் பெருமைக்குரியவராக அழைக்கப்பட்டு “பரதநாட்டிய நட்சத்திரக் கலைஞர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கே காணப்படும் படத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தனது விருதினை கனடாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞரும் பல நடனமணிகளை உருவாக்கிய பெருமைக்குரியவருமான திருமதி மேனகா தக்கர் வழங்குவதையும் அருகில் ராதிகா சிற்சபைஈசனை பரதநாட்டியத்துறைக்குள் கொண்டு வந்து அவரை ஒரு சிறந்த நடனக்கலஞராக உருவாக்கி அரங்கேற்றம் செய்யத்தூண்டி அவரது குரு திருமதி நிரோதினி பரராஜசிங்கம் நிற்பதையும் காணலாம்.

0 Responses to கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனுக்கு பரதநாட்டிய நட்சத்திர கலைஞர் விருது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com