டெல்லியில் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளான பாராமெடிக்கல் மாணவி உயிரிழந்தார். சிங்கப்பூர் மவுண்ட்
எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவியின் உயிர் பிரிந்தது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த
மாணவி உத்திரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த
16ஆம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல்
வன்கொடுமைக்குள்ளானர் மாணவி. மாணவி மற்றும் அவருடைய நண்பரை தாக்கி
பேருந்திலிருந்து வெளியே வீசியது அந்த கும்பல்.
காயமடைந்த
மாணவிக்கு டெல்லி சப்தர்ஜிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது. உடல் நிலை மோசமானதால் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் இருந்து
சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். பலத்த காயம் மற்றும் மூளைப் பகுதியில்
ஏற்பட்டுள்ள காயம் காரணமாக 13 நாள் போராட்டத்திற்கு பிறகு மாணவி
உயிரிழந்தார்.
0 Responses to டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பாராமெடிக்கல் மாணவி உயிரிழந்தார்!