Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த மாணவிக்கு மூளைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மாணவி உயிரிழந்ததற்கு இந்திய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அப்பெண்ணின் குடும்பத்திற்கும், அப்பெண்ணிற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து ‌கொள்வதாக பிரபல நடிகை சபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் இந்தியாவின் மகள் எனவும், இந்த கொடூர சம்பவம் இந்தியாவையே விழித்தெழச் செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லைய்யா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனிதாபிமானமற்ற கொடூர செயலுக்கு அந்த இளம்பெண் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும், இதற்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

அப்பெண்ணின் ஆத்மா சாந்தி அடையட்டும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ‌தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அப்பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கும் இரங்கலை தெரிவிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Responses to டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழப்பு: பிரபலங்கள் இரங்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com