சமாஜ்வாத எக்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு
தீவிரவாத தாக்குதல்களுடன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு தொடர்பிருப்பது உண்மை
தான் என மத்திய அரசு சார்பிலும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தீவிரவாதம் தொடர்பிலான குற்றங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு தொடர்புகள் இருப்பதாக மத்திய உள்தூறை அமைச்சர் சுஷில்குமார் ஷ்ண்டே அண்மையில் கூறியிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
'ஷிண்டேயின் கருத்துக்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட போகிறது. ஷிண்டே அவர்களின் செல்லப்பிள்ளை போல் செயற்படுகிறார்' என பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில் 'ஷிண்டே கூறியது சரியான தகவல்கள் தான். சில தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்க்கு தொடர்பு இருப்பது நிஜம் தான்' என தற்போது மத்திய அரசும் கூறியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இது குறித்து கருத்து கூறுகையில் 'தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சமாஜ்வாத எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டுவெடிப்புக்களில் குறைந்த பட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேராவது ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன' என கூறியுள்ளதுடன், அவர்களின் பெயர்களையும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க மற்றும் கிளை உறுப்பினர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் ஒரு சிலர் இன்னமும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், பாஜகவின் மத சார் அமைப்பான ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத முகாம்களை நடத்துகின்றது. அவர்கள் காவி உடை தீவிரவாதிகள் என குற்றம் சுமத்தினார். அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 'உள்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து உண்மை தான். புலனாய்வு அமைப்புக்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்த உண்மைகள் அவை. இந்த பிரச்சினையை திசை திருப்பும் வகையில் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள், தேவையற்ற கருத்துக்களை கூறி வருகின்றன. என்னை பொருத்தவரை பயங்கரவாத அமைப்புக்களுக்கு எந்த மதமும், நிறமும் இல்லை என்றார்.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் ஆர்.கே.சிங்கும் இக்கருத்துக்களை வழிமொழிந்துள்ளதால் பாஜகவுக்கு புதிய நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.

0 Responses to 'தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உண்மை தான்' : ஆர்.கே.சிங்