Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலை இயக்க அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரது விசாரணைகளுக்குள்ளாககப்பட்டுள்ளார்.

அவரது வல்வெட்டிததுறையிலுள்ள அவரது அலவலகத்திற்கு விஜயம் செய்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் இருவர் இவ்விசாரணைகளை நடத்தியுள்ளனர்.விடுதலைப்புலிகளுக்கு இருபடகுகளை கொள்வனவு செய்து வழங்கியதாக மற்றொரு முக்கியஸ்தரான சதீஸ் என்பவரும் அவரது அலுவலகத்தினில் விசாரணைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டிததுறையிலுள்ள கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகததினில் இவ்விசாரணை நடந்துள்ளது.அவர் வல்வெட்டித்துறை நகரசபையினது பிரதி தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

எனினும் இதுவொருவுள்வீட்டு காட்டிக்கொடுப்பனவென சந்தேகம் எழுந்துள்ளது.நகர சபை தலைவருக்கு எதிராக செயற்பட்டுவரும் இவ்விருவருக்குமெதிராக வழங்கப்பட்ட தகவலையடுத்தே விசாரணைகள் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும் சுயாதீன தகவல்கள் அதனையுறுதிப்படுத்தியிருக்கவில்லை.
ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சி.சிறீதரன் ஆகியோரும் இத்தகைய விசாரணை வளையத்தினுள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com