Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப்பை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, நாளை (புதன்கிழமை) கொடாநாட்டில் தொடக்கி வைக்கிறார்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்...

அதே போல தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்கள், மற்றும் ஊர்களிலும் இந்த பொங்கல் பரிசுபை வழங்கும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப் படவுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 84 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 100 ரூபாய் பணம், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவைகள் அடங்கிய பை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று கடந்த சனிக்கிழமை அன்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

அதன் படி, பொங்கல் பரிசுப்பை நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும், தொடர்ந்து பொங்கல் வரை இந்த பரிசுப்பை வழங்கும் பணி நடக்கும் என்றும் தெரிகிறது. கூடவே வேட்டி, சேலையும் பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பொங்கல் பரிசுப்பை வழங்கும் திட்டம் : ஜெயலலிதா கொடாநாட்டில் தொடக்கி வைக்கிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com