காஷ்மீரில் பாகிஸ்தானின் இராணுவ தாக்குதலில் இரு இந்திய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப்படையினர் மீது பாகிஸ்தான் இராணுவத்தினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், கொல்லப்பட்ட இருவரில், ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உருக்குலைந்து இருந்ததாகவும் இந்திய இராணுவத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜம்முவிலிருந்து 220 கி.மீ வடக்கே மெந்தர் எனும் இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இதே காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடுமையான புகார் மூட்டத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் படையினர் இத்தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும், இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பாகிஸ்தான் இராணுவம், இரு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் படைவீரர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உலக கவனத்தை திசை திருப்புவதற்காக இப்புதிய பிரச்சாரத்தை இந்தியா கிளப்பிவிட்டிருப்பதாக கூறியுள்ளது. குறித்த சம்பவம் நடந்த போது இந்திய படையினரே எல்லை கட்டுப்பாட்டு பகுதியை மீறியிருந்தாகவும் பாகிஸ்தான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு, இந்திய - பாகிஸ்தான் அரசுகள் காஷ்மீரில் சமாதான உடன்படிக்கையை கொண்டுவந்தன. எனினும் 2008 மும்பை தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா இடைநிறுத்திக்கோண்டது. எனினும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த மாதம், இரு நாடுகளும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டிருந்தன.

0 Responses to காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் : இரு இந்திய இராணுவ வீரர்கள் பலி