திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:
காவிரி
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளிஆகாததற்கு நீங்கள் தான் காரணம்
என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
காவிரி
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை அரசிதழில் வெளியிடவேண்டும் என்பது குறித்து
தி.மு.க.விற்கோ, அ.தி.மு.க.விற்கோ தமிழகத்திலே உள்ள மற்ற கட்சிகளுக்கோ
கருத்து வேறுபாடுகள் கிடையாது. ஆனால் உச்சநீதி மன்றத்தில் இதுகுறித்த
வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய
அரசிதழில் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போதும் மத்திய அரசின் சார்பில்
அரசிதழில் வெளியிடாததற்கு இதைத்தான் காரணமாக சொல்லுகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் மத்திய
அரசின் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டபோது, கர்நாடக மாநில அரசின் சார்பில்
அரசிதழில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடக்கூடாது என்று
தெரிவித்ததால், மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை மத்திய அரசு
கேட்டிருப்பதாகவும், அதன் பரிந்துரை வந்த பிறகு, முடிவெடுக்க நான்கு
வாரங்கள் அவகாசம் தேவை என்றும் கூறினார்.
வழக்கு
பிப்ரவரி 4-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதி
தீர்ப்பை அரசிதழில் வெளியிட நான் முட்டுக்கட்டை போட்டேன் என்று அமைச்சர்
பேசுகிறார் என்றால் அது எவ்வளவு புரியாத்தனமான பேச்சு?
அண்ணா வளைவினை திறந்து விட்டார்களே?.
அண்ணா
பவள விழா நினைவாக வைக்கப்பட்ட வளைவுகளை அகற்ற கூடாது என்ற முடிவினை
முதல்-அமைச்சரோ, இந்த அரசோ உரிய நேரத்தில் எடுத்திருந்தால் தமிழக அரசுக்கு
241 லட்ச ரூபாய் விரயமாகியிருக்காது. முதல்-அமைச்சருக்கு தெரியாமல் இந்த
முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அந்த முடிவினை எடுத்தவர் யார், அவருக்கு
என்ன தண்டனை, என்பதை உலகத்திற்கும், மக்களுக்கும் இந்த அரசு வெளிப்படையாக
தெரிவிக்க வேண்டும்.
மின்வாரியத்தில்
ஏராளமான பணி இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதனால்தான் மின் இணைப்புகளை
பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறதே?
மின்வாரியத்தில்
56,758 பணி இடங்கள் காலியாக இருப்பதாகவும், மின்இணைப்பு, பராமரிப்பு,
மின்கணக்கீடு, மீட்டர்களில் ஏற்படும் பழுதுகளை கவனிப்பது, டிரான்ஸ்பார்மர்
பராமரிப்பு போன்ற பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள்
வந்துள்ளன.
இந்த நிலையில் தற்போதுள்ள மின் இணைப்புகளை சரியாக, முறையாக பராமரிக்கவே போதுமான ஆட்கள் இல்லாமல் மின் வாரியம் தட்டுத்தடுமாறி வருகிறது. மின்வாரியத்தில் தற்போது மொத்தம் 56,758 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் தற்போதுள்ள மின் இணைப்புகளை சரியாக, முறையாக பராமரிக்கவே போதுமான ஆட்கள் இல்லாமல் மின் வாரியம் தட்டுத்தடுமாறி வருகிறது. மின்வாரியத்தில் தற்போது மொத்தம் 56,758 பணியிடங்கள் காலியாக உள்ளன.
0 Responses to காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியாகாததற்கு நான் காரணமா?: கலைஞர்