கல்வீச்சில் இருந்து தப்பிக்க அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து நீண்ட தூரம் செலும் அரசு பேருந்து டிரைவர்கள், ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டுகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட சம்பவத்தை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, சாலை மறியல், வாகனங்களுக்கு தீவைப்பு, வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.
இதனால் அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் மாலை 6 மணிக்கு மேல் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இல்லை.பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடக்கும் போது, பெரும்பாலும் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் அதிகம் உடைக்கப்படுகின்றன.
இதை அடுத்து கல்வீச்சு சம்பவங்களின் போது, ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்படாது தப்பிக்க, ஜெயங்கொண்டம் பணி மனை சார்பில் ஓடடுனர்களுக்கு தலைக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. முதற் கட்டமாக நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. இதை அடுத்து, ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் அருகே ஒரு பேருந்தில் நேற்று மத்தியம் பாமகவினர் எனச் சொல்லப்படும் மூன்று மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் பயணி ஒருவரின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.
0 Responses to கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து தமிழக பேருந்து ஓட்டும் டிரைவர்கள்!