ஐபிஎல் பேட்டிங்கில் தோற்றதால் பணத்தை மீள் செலுத்துவதற்காக தனது உறவினரின் மகனை கடத்தி கொலை செய்த இருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமார் ரூ 10 இலட்சம் வரை ஐபிஎல் பேட்டிங்கில் தோற்றதால் தனது நெருங்கிய உறவினரின் 13 வயது மகனை கடத்தி ரூ 30 இலட்சம் வரை கப்பம் கேட்டுள்ளார் ஹிமான்சு எனும் இளைஞர்.
குறித்த ஆதித்தா ரங்கா எனும் சிறுவனின் தந்தை ஜிதேந்திரா என்பவர் டயமண்ட் வியாபாரி ஆவார். அவரது வீட்டுக்கு அருகிலேயே ஹிமான்சு வசித்து வந்துள்ளார்.
அவருடைய நண்பருடன் இணைந்து ஆதித்யாவை காரில் கடத்தியிருக்கிறார். விஷயம் கிரைம் பிராஞ்சு வரை சென்றுவிட்டதை அடுத்து ஆத்திரத்தில் இக்கொலையை செய்துள்ளனர்.
இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இருவரும் எம்.பி.ஏ பட்டதாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to ஐபிஎல் பேட்டிங்கால் வந்த விபரீதம் : 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த உறவினர்