Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


கடந்த 6 நாட்களாக பருவ நிலை மாற்றத்தால், காற்றாலை மின் உற்பத்தியில் பெரும் அளவில் மற்றம் ஏற்பட்டுள்ளது.
 ஒரே நாளில் மூன்றாயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவிற்கு காற்றாலை மின் உற்பத்தி அபாரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சனை அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்து உள்ளது. சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் இயங்கும் நேரங்களில் மட்டும் மின்தடை நேரம் குறைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 தினங்களாக பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்று ஓரளவு வீசத் தொடங்கியுள்ளது. இதனால் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நெல்லை மற்றும் ஈரோடு மண்டலங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை 100 மெகாவாட் மின்சாரம் கூட கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலை மாறி, நேற்று முன்தினம் நெல்லை மண்டலத்தில் அதிக பட்சமாக 1700 மெகாவாட் கிடைத்ததாகத் தெரிய வருகிறது.

இது நேற்று மேலும் அதிகரித்து மாலை 8 மணி நேர நிலவரப்படி, 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. ஈரோடு மண்டலத்திலும் இதே நிலை நீடித்தால் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கியது. இதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மின்தடை இல்லை.

அதோடு இன்னும் ஒரு குற்றசாட்டும் எழுந்துள்ளது. காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், மின்வாரியம் முழுமையாக ஏற்கவில்லை. சுமார் 20 முதல், 30 சதவிகிதம் மின்சாரம் வீணாவதாகவும், இதை அடுத்து அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல போதிய மின் பாதையை அமைக்க வேண்டும் என்று, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Responses to ஒரே நாளில் மூன்றாயிரம் மெகாவாட் மின் உற்பத்தி:காற்றாலை மின் உற்பத்தி அபாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com