புதுக்கோட்டை மாவட்டம்
கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்
மனைவி வசந்தா நீண்ட காலமாக பால் மாடு வளர்த்து வருகிறார்.
இவரது
வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்த காலை கன்று குட்டிக்கு வலது
பக்க பின்னங்காலின் முழங்காலில் மேலும் ஒரு சிறிய கால் முளைத்துள்ளது.
அதிக எடை கொண்டதாக வலது பக்க பின்னங்கால் இருப்பதால் கன்று நடக்க மிகவும்
சிரமம்படுகிறது. மேலும் தலையின் தோற்றமும் மாறி இருப்பதுடன் இடது கண் கரு
விழிகள் இன்றி பார்வை திறனுடன் சிறிய கண்களுடன் உள்ளது. இந்த அதிசய கன்று
குட்டியை திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு கொடுக்க இருப்பதாக கன்று
குட்டியின் உரிமையாளர் வசந்தா கூறினார். இந்த அதிசய கன்றுகுட்டியை அப்பகுதி
பொதுமக்கள் ஏராளம் வந்து பார்த்து செல்கின்றனர்.
0 Responses to 5 கால்களுடன் பிறந்த அதிசய கன்று! கண்களும் மாறுபட்டு இருக்கிறது! (படங்கள் இணைப்பு)