Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு தெரிவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நிர்மல் என்ற இளைஞர் சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த மாணவியை தான் காதலிப்பதாக மாணவியுடன் படிக்கும் ஒருவர் பேஸ்புக்கில் தவறான தகவலை கொடுத்துள்ளார். இதனால் நிர்மல் அந்த மாணவியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். 

இதுகுறித்து போலீசில் புகார் செய்த மாணவி, நிர்மல் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டையும் கூறியிருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் ரவிகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிர்மலின் பேஸ்புக்கு ஒரு தகவல் வந்துள்ளது. இந்தப் பெண்ணை ஏற்கனவே கல்லூரியில் ஒருதலைக்காதல் செய்தேன் என்று தகவல் வந்துள்ளது. இந்த தகவலை வைத்துக்கொண்டு நிர்மல் தற்போது நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றார்.

நிர்மலுடன் அவருடைய மாமா ஜெயப்பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். தாம்பரம் நீதிமன்றம் உத்தரவுப்படி இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். நிர்மலின் தாயாரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 Responses to பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com