மரக்காணம் கலவரம் தொடர்பாக கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாமகவினர் 213 பேர் இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸும் இன்று காலை நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்.
ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம், ஜெயங்கொண்டான், காஞ்சீபுரம் , வேலூர் ஆகிய பகுதிகளில் பாமகவினரால் வன்முறை வெகுவாக கையாளப்பட்டதாகத் தெரிய வருகிறது. இதை அடுத்து ராமதாசுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்து இருந்தது.
தடையை மீறி கூடங்குளத்தில் நுழைந்ததற்கு வள்ளியூர் நீதிமன்றம் ராமதாசுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கு மற்றும், சித்திரைத் திருவிழாவில் வன்முறையைத் தூண்டிய வழக்கு ஆகிய மூன்று வழக்குகளிலும் ராமதாசுக்கு ஜாமீன் கிடைத்து விட, இன்று ஜாமீனில் ராமதாஸ் விடுதலை ஆனார்.
விடுதலை ஆகி வெளியில் வந்த ராமதாஸ், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தெரிந்தும் கூட, தான் காவல்துறையினரால் மேலிடத்தின் உத்தரவுப்படி, மிகவும் அலைக்களிக்கப் பட்டதாக கூறினார். இவருடன் சேர்ந்து திருச்சி சிறையில் இருந்து பாமகவினர் 213 பேர் இன்று விடுதலை ஆனார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to பாமகவினர் 213 பேர் ஜாமீனில் விடுவிப்பு:ராமதாசும் இன்று விடுதலை!