Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


கடந்த வாரம் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நவாஸ் ஷெரீப்புக்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவைப் பற்றி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 11ம் திகதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனாலும் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், இப்போது, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 18 எம் பிக்கள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்தனர்.

இதன் மூலம் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தது. வேறு எந்த கூட்டணிக் கட்சியின் தயவும் இன்றி நவாஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஜூன் 2ம் திகதி இந்த கட்சி பதவி ஏற்றுக் கொள்ளும் என்று, பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நவாஸ் ஷெரீப், இந்தியாவுடனான நல்லுறவு தொடரும் நட்பு பாராட்டப்படும் என்றெல்லாம் அவ்வப்போது அறிக்கை விடுத்து வருகிறார். அதோடு, பதவி ஏற்பு விழாவுக்கு, இந்திய பிரதமருக்கு அழைப்பும் விடுத்து இருக்கிறார். இப்படியெல்லாம் இந்தியா பற்றி இணக்கமாக அறிக்கை விடுத்துவரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி, நவாஷ் ஷெரிப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, இந்தியாவுடனான எந்த விஷயத்திலும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே அந்த அறிவுறுத்தல் ஆகும்.

0 Responses to இந்தியாவுடன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் : நவாஸ் ஷெரிஃபுக்கு ராணுவத் தளபதி எச்சரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com