Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


செனல் 4 ஊடகத்தின் வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகபூவமாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றிற்கான இலங்கைப் பிரதிநிதி பீ.எம். ஹம்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் சில வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளதாகவும், இவை போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆவணப்படத்தின் மூல ஆதாரங்களை தந்து உதவினால் விசாரணைகளை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்ற ரீதியில் செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்பதனை திட்டவட்டமாக அறிவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திபடுத்தும் நோக்கில் செனல்4 ஊடகம் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களுக்கு நிதி உதவிகளை வழங்கியவர்கள் தற்போது சுயாதீன மனித உரிமை ஆர்வலர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எண்ணிலடங்காத மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றில் செனல்4 ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செனல்4 ஆவணப்படத்தில் தமிழ்மொழியில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் பிழையான திரிபுபடுத்தப்பட்ட அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.இராணுவத்தினர் தாக்கியதாக பொதுமக்கள் குறிப்பிட்டு கூறவில்லை எனவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவே அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரனை இராணுவத்தினர் படுகொலை செய்ததாக சுமத்தப்படு;ம் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சில புகைப்படங்களை வைத்துக் கொண்டு இந்தப் படுகொலையை படையினர் மேற்கொண்டிருக்கலாம் என தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமானது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். செனல்4 ஊடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படவதனை தமிழ் மொழி தெரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்வர் என ஹம்சா தெரிவித்துள்ளார்.

0 Responses to செனல் 4 வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது – இலங்கை அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com