பாமக நிறுவனர் ராமதாசுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ராமதாஸீன் மகனும், பாமக இளைஞர் அணித்தலைவருமான அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மரக்காணம் கலவரம் தொடர்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மே 11-ஆம் தேதி ஜாமீனில் வெளி வந்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ராமதாஸூக்கு கடந்த 2 நாள்களாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
0 Responses to ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு