Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டமன்றத்தில் விவாதம் நடத்தாமல், திட்டங்களை அறிவிக்கும் தமிழக அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 110வது விதியின் கீழ் அறிக்கை விடுவது மட்டுமே தமிழக அரசின் சாதனை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

விபத்து ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்த வேலூர் மாவட்ட திமுக கலை இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் செந்தில்குமார் என்பவரை திமுக எம்பி கனிமொழி, மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது. சட்டமன்றத்தில் விவாதம் நடத்தக் கூடாது என்பதற்காகத்தான், அதிமுக அரசு 110வது விதியின் கீழ் அறிக்கை வெளியிடுகிறது. விவாதம் நடத்தாமல் திட்டங்களை அறிவிப்பது ஜனநாயக விரோதம். தமிழகத்தில் மின்பற்றாக்குறையால் பல தொழில்கள் நசிந்துள்ளன என்றார்.

0 Responses to அறிக்கை விடுவதுதான் அதிமுக அரசின் சாதனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com