Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பிரான்சில் தமிழ்மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டம் 8 வது நாளாகவும், தாயகவிடுதலையை நேசித்து சிங்களத்தின் கடல்கடந்த பயங்கரவாதத்திற்கு பலியாகிப்போன தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 6வது மாதநினைவு நாளாகவும் இன்றைய நாள் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய நாளில் தனது மகனை விடுதலைப்போராட்டத்தில் இழந்து போன தாயாகிய திருமதி சரசுவதி அம்மா அவர்களினால் காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செய்யப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. காலையில் இருந்து மதியம் வரை மழை பெய்தபோதும்  போராட்டம் தொடரப்பட்டது. மாலை பல வெளிநாட்டு மக்களும், இந்திய மக்களும் முதாளர்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். கையெழுத்து பெறும் படிவத்தில் கையெழுத்திட்டும் இருந்தனர். மாலை 6.00 மணிக்கு பழரசம் கொடுக்கப்பட்டு நிறைவுக்கு வந்திருந்தது.

0 Responses to பிரான்சில் தமிழ்மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணா மறுப்புப்போராட்டம் 8 வது நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com