Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.



நாம் அரசாட்சி செய்து தலைநிமிரந்து வாழ்ந்த எமது உயிரினும் மேலான தமிழீழ மண் இன்று சிங்கள பேரினவாதத்தால் அடிமைப்பட்டுள்ளது. வந்தோரை வரவேற்ற எமது தமிழீழ உறவுகள் சொல்லெனா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட வகையில் எமது மக்களின் கருத்துரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை பொருளாதாரவுரிமை மறுக்கப்பட்டு எமது சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எமது சகோதரர்களை துன்புறுத்தி தமிழினவழிப்பை நடாத்தி வருகின்றது.

சிங்கள பேரினவாதம் செய்த இனவழிப்பின் உச்சக்கட்டமாக பயங்கிரவாதம் என்ற போர்வையில் உலகவல்லரசுகளின் துணையுடன் தமிழினவழிப்பை நடாத்தி தமிழர்களின் தாயக நிலத்தை அபகரித்த நாளே 18 வைகாசி 2009ம் ஆண்டாகும். இன்று தமிழர்களுடைய விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ள காலத்தில் எமது உயிரினும் மேலானா தாயகப்பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார பண்பாட்டு சின்னங்களை அழித்து பௌத்த சிலைகளை நிருபி சிங்கள பெயர் மாற்றங்களை செய்து முழுமையாக எமது தாயகப்பூமியை ஆக்கிரமித்து மற்றும் தமிழ் தேசியத்திற்கு மிகவும் ஆபத்தை உண்டாக்கக்கூடிய நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.

சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைக்குள் இருந்து எமது மண்ணை பாதுகாத்து இனவழிப்பு செய்தவர்களை நீதியின் முன்னிருத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதை செய்து முடிக்க கூடிய மாபெரும் சக்த்தியாக புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையே திகழ்கின்றது. ஆகையால் 18.05.2013 அன்று யேர்மனியில் நடைபெறவிருக்கும் தமிழினவழிப்பு நாளில் உணர்வுபூர்வமாக கலந்துகொள்ள வேண்டியது புலம்பெயர் யேர்மன் தமிழர்களின் கடமையாகும்.

முள்ளியவாய்க்கால் சமரில் தப்பி போக வாய்ப்பிருந்த பொழுதிலும் எமது தமிழீழ தேசத்தை மீட்கவேண்டும், „நாம் மடிந்தாலும் புலம்பெயர் தமிழர்கள் எமது விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பார்கள்“ என்று எண்ணி தான் இறுதி வரை போராடினார்கள். அவர்களுடைய கனவை நனவாக்குவது எமது கடமையாகும். மேலும் எமது மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் „எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.“ ஆகையால் அனைத்து தமிழ் உறவுகளையும் தமிழினவழிப்பு நினைவு நாளில் கலந்து கொள்ளுமாறு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மிகவும் உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றது.

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

0 Responses to ஒன்றாய் எழுந்து தமிழினவழிப்பிற்கு நீதி கேட்போம் வாரீர் - TYO Germany

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com