Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,

கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?

என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூரில் சனிக்கிழமை பொதுக்கூட்டம், பேரணி நடத்த எண்ணி, கடலூர், சிதம்பரம் நகர்களில் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், வரவேற்பு தட்டிகள் பரவலாக வைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், பேனர்கள் வைத்ததாக காரணத்தைக் காட்டி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 Responses to ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்டபோது பிரபாகரன் படம் பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com