ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிறீசாந்த் மீது, ஏனைய வீரர்கள் ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 9ம் திகதி மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ஒரு ஓவரில் 13 ரன்களை கொடுத்தார் சிறீசாந்த். இது புக்கீஸுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி வழங்கப்பட்ட ரன்களாகும்.
எனினும் இப்போட்டியில் சிறீசாந்த் விளையாடுவதை ராகுல் டிராவிட் விரும்பியிருக்கவில்லை எனவும், இதற்கடுத்து மே 15ம் திகதி ராஜஸ்தான் அணி மும்பையுடன் விளையாடிய போட்டியில் சிறீசாந்த்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு காரணமும் இது தான் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது மே 12ம் திகதி சென்னையுடன் இடம்பெற்ற போட்டியின் பின்னர், அணியிலிருந்து தூக்கப்பட்டிருக்கிறார் சிறீசாந்த். இது அவருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவரிடம் அதிகரித்து வந்த சண்டித்தனமான நடவடிக்கைகளால் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருந்ததாம்.
அதோடு ஜெய்ப்பூர் ஹோட்டலிலிருந்து அவர் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தாராம். எனினும் தான் அணியில் இடம்பெற வேண்டும் என ராகுல் டிராவிட்டிடம் சிறீசாந்த் தனிப்பட்ட வகையில் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தாராம். ஒரு வித சண்டித்தனத்துடன், வலுக்கட்டாயமாக தன்னை போட்டிகளில் இணைத்துக்கொள்வது குறித்து சிறீசாந்த் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தகாவும், இது புக்கீஸின் அழுத்தத்தினால் தான் அவர் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்பது இப்போது தெரியவருகிறது எனவும் ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் மே 15ம் திகதிக்கு பின்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலிருந்து சிறீசாந்த் அதிரடி நீக்கம் செய்யப்பட்டதற்கு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததே காரணம் என எடுத்துக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அன்றுவரை நாம் அவரை சந்தேகப்படவில்லை என்கிறது அணி நிர்வாகம்.
0 Responses to சூதாட்டத்தில் சிக்கும் முன்னரே சிறீசாந்த்தை மோப்பம் பிடித்தாரா ராகுல் டிராவிட்?