Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் செப்டம்பரில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா சபையின் வருடாந்தக் கூட்டத்தில் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் புரூனேயின் தலைநகர் பன்டார் செரி பெகவானில் நடைபெறும் ஆசியான் அமைப்பின் பிராந்திய மன்றக் கூட்டத்தில் வைத்துத் தெரிவித்துள்ளார்.
புரூனேயில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சல்மான் குர்ஷித்தை பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அசிஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பாகிஸ்தான் தரப்பும் இணைந்து மன்மோகன் சிங் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதற்க்குட் தேவையான அழைப்பை மறுபடியும் விரிவு படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

எனினும் இவ்விரு பிரதமர்களும் ஒன்றாகச் சந்திக்கவுள்ளனர் என்ற செய்தி இன்னமும் உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சால் உறுதிப்படுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அசிஸ் இன் கூற்றுப் படி பாகிஸ்தானுடன் தனது இராஜ தந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இந்தியா சமீப காலமாக அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் புதிய பிரதமரான நவாஸ் ஷெரீப் இந்தியப் பிரதமரை சந்தித்தால் அது இவ்விரு தலைவர்களினதும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இந்தியாவின் முக்கியத் தலைவர் ஒருவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தது 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்த சமாதான முன்னெடுப்புக்களின் போதாகும். இதன் போது இந்தியாவின் முன்னால் பிரதமர் வாஜ்பேயி பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சென்றிருந்தார்.

0 Responses to இந்திய பாகிஸ்தானிய பிரதமர்கள் செப்டம்பரில் நியூயோர்க்கில் சந்திப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com