வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் சீக்கிரத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றார். நாட்டில் தற்போது 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் செய்வது மற்றும் வடக்கு தேர்தல்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. வடக்கு மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதுதான் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.
அத்தோடு, பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பின் அது குறித்தும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர். கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Responses to தமிழ் மக்களுக்கு விரைவாக அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்:அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க